Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு »  கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை 

 கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை 

1மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியின் குறுக்கே அணைகள் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவருவார் என கூறப்படுகிறது. இந்தத் தீர்மானத்தின் மீது தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்த பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையைத் தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேகதாது விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com