Thursday , 16 August 2018
Home » சினிமா » கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியாகிறது காலா!!

கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியாகிறது காலா!!

kaala-poster

ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com