Thursday , 18 October 2018
Home » சினிமா » கர்நாடகத்தில் ‘காலா’ படத்துக்கு எதிர்ப்பு வினியோகஸ்தர் அலுவலகம் சூறை

கர்நாடகத்தில் ‘காலா’ படத்துக்கு எதிர்ப்பு வினியோகஸ்தர் அலுவலகம் சூறை

Rajinikanths-Kaala-கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு ‘காலா’ படத்துக்கு எதிராக கன்னடர்கள் போராட்டம்இ வினியோகஸ்தர் அலுவலகம் சூறை; ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு

ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள காலா வினியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பினர் சூறையாடினார்கள். ரஜினி போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.ரஜினியின் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் காலா படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கனகபுர சீனிவாஸ் தடையை மீறி 130 தியேட்டர்களில் காலா படத்தை திரையிடப்போவதாக அறிவித்தார்.பெங்களூருவில் உள்ள சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் காலாவை திரையிட முன்வந்தன. இதனால் கர்நாடகாவில் 150 தியேட்டர்களில் காலா படம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இது கன்னட அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் காலா படத்துக்கு எதிராக நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெங்களூருவில் காலா பட வினியோகஸ்தர் அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சூறையாடினார்கள். அங்கிருந்த ரஜினி பட போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர். நாற்காலிகளையும் வெளியே தூக்கி வீசினார்கள்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com