Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு 8 லாரிகளை அதிரடியாக பறிமுதல்!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கரூர் » கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு 8 லாரிகளை அதிரடியாக பறிமுதல்!!

கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு 8 லாரிகளை அதிரடியாக பறிமுதல்!!

vlcsnap-2018-07-03-10h51m41s002கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே, சட்டவிரோத மணல் கொள்ளை காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் தீவிரமாக பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பௌத்தரம் பகுதியில், கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு கொணடிருக்கும் போது, கோவையை நோக்கி சென்ற 6 லாரிகள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காவல்துறை உதவியுடன் அனுப்பி வைத்தனர். மேலும், இதே போன்று கனிம வளத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இரு லாரியும் ஆக, மொத்தம் 8 லாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  ஏற்கனவே, பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளிலிருந்து சுமார் 5 டன் மதிப்பிலான மணல் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com