Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கரூர் » கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

vlcsnap-2015-04-11-10h33m02s158கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்த தரை கடைகளை அகற்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் முன் உள்ள நடைபாதையை பழக் கடை, தேனீர் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் விமலா, வருவாய் ஆய்வாளர்கள் மணிமாறன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்துக்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதையடுத்து, பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டி வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் ஆகியோரது கடைகளையும் அகற்ற முயன்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வியாபாரிகள் அனைவரும் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com