Monday , 23 October 2017
Home » இந்தியா » கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதர்…

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதர்…

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதர் மீது 5 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஆவார். சாராய வியாபாரியான ஸ்ரீதர், 1999ல் தொழில் தகராறில் தனக்கு போட்டியாக இருந்த ராமதாஸ் என்பவரை கொலை செய்தார். தொழில் போட்டி காரணமாக கிருண்னர் என்பவர் 2010ல் படுகொலை செய்யப்பட்டார். 2012ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலர் அம்பேத்கர் வளவன் பேருந்து நிலையம் எதிரே கொல்லப்பட்டார்.

don-759அதே ஆண்டு சென்னை செங்குன்றம் அருகே அரசு பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் பயணித்துக் கொண்டிருந்த ரவுடி தேவராஜ் என்பவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்தார். இதனையடுத்து ஸ்ரீதர் மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. 2002ம் ஆண்டில் கணேசன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததை உட்பட 8 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 ஆள் கடத்தல் வழக்குகளும், கட்டப்பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடி தடி, செம்மரம் கடத்துதல் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் ஸ்ரீதர் மீது நிலுவையில் உள்ளது. இதுவரை 5 முறை குண்டர் சட்டத்தில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com