Monday , 25 June 2018
Home » தமிழ்நாடு » கமல்ஹாசன் சுற்றுப்பயணம் ரத்து

கமல்ஹாசன் சுற்றுப்பயணம் ரத்து

KamalHassanமக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com