Monday , 17 December 2018
Home » முக்கிய செய்திகள்: » கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, 5 கோடி ரூபாய் நிதியுதவி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, 5 கோடி ரூபாய் நிதியுதவி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

epsகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர், வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலம், கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்றும், கேரள மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார

Facebook Auto Publish Powered By : XYZScripts.com