Thursday , 16 August 2018
Home » உலகம் » கடல் மட்ட உயர்வு விகிதம் இருமடங்காகும்

கடல் மட்ட உயர்வு விகிதம் இருமடங்காகும்

165609922கடல் மட்ட உயர்வு குறித்து 25 ஆண்டுகளாக செயற்கோள் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் கடல் மட்ட உயர்வு விகிதம் ஒரு வருடத்திற்கு  0.1 சதவீதமாக இருந்தது. தற்போது ஒரு வருடத்திற்கு 0.13 சதவீதமாக உயர்ந்திருப்பது தெரியவந்தது.

இந்த வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் 2100-ம் ஆண்டில் கடலோர பகுதிகள் அழியும்  ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுயுள்ளார், நெரிம் – செயற்கோள் தகவல்களை ஆராய்ந்த விஞ்ஞானி. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சுற்றுப்புறத்தில் அதிகமாவதால், காற்று மற்றும் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.  இரண்டு வழிகளில் கடல் மட்டம் உயர்கிறது, நீரின் வெப்பம் உயரும் போது நீர் விரிவடைகிறது – ”வெப்ப விரிவாக்கம்”. இதன்மூலம் உலக கடல் மட்ட அளவு 7 செ.மீ. உயர்ந்துள்ளது.  இரண்டாவதாக , நிலப் பனிக்கட்டிகள் உருகி கடலில் கலப்பதாலும் கடல் மட்ட அளவு உயருகிறது.

க்ரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இருக்கும் கடல்பகுதியில், பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதால் கடல் மட்ட உயர்வும் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 2100ஆம் ஆண்டில் 60 செண்டிமீட்டர் வரை கூட கடல் மட்டம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், எரிமலை வெடிப்பது போன்ற சம்பவங்கள் கடல் மட்ட உயர்வில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை தவிர்த்து , பருவ நிலை மாற்றம் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உயர்வை வேகப்படுத்தும் முக்கிய காரணியாக பருவநிலை மாற்றம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com