கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால் வட்டி ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, அதாவது ரூபாய் 5 அயிரத்து 500 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழக்குவதை இலக்காக கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும். மேலும், கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு இக்கடன்கள் வட்டியின்றி கிடைக்கும். இதற்கான, வட்டி மானியம் வழங்கிட இந்த பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளியில் வாழைக்கும், கிருஷ்ணகிரி மற்றும் தேனியில் மாம்பழத்திற்கும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் தக்காளிக்கும், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வெங்காயத்துக்கும், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் மிளகாய்க்கும், ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.