Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடு » கஜ புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான,நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

கஜ புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான,நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

3கஜ புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜ புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கஜ புயல் குறித்து வானிலை ஆய்வுமையம் முன்னறிவிப்பு கொடுத்த உடனே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். கஜ புயலினால் 52 பேர் உயிரிழந்தனர் என்றும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, சேதமடைந்த பைபர் படகுகளுக்கு நிவாரணத் தொகை, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1-லட்சத்து 50-ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய முதலமைச்சர், முதல் ஆண்டில் ஒரு லட்சமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 50 ஆயிரம் வீடுகளும் என, மொத்தமாக 3 லட்சம் வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com