Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » முக்கிய செய்திகள்: » கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்!

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்!

Ramadoss 1உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 15-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே தோன்றுகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், உலகச் சந்தையில் ஏறுமுகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரியத் தொடங்கியது. ஆனால், இந்த விலைவீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தயாராக இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது முழு அளவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவை கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதியாகவே விலை குறைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com