Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » இராமநாதபுரம் » ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடலை மீட்டு தரக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளராக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மாயமாகினர். பிறகு ஓமன் கடற்கரையில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் கண்டெடுக்க்கப்பட்டன.

டிஎன்.ஏ சோதனையில் இறந்தவர்கள் நம்புதாளை பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் கார்மேகம் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். மேலும், மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஏமன் நாட்டில் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி ஆட்சியர் வீரராகவ ராவிடம் வலியுறுத்தப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com