கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனசரகத்தில் மூன்று குழுக்களாக ஏழு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடக மாநில காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வெளியேறி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக, ஓசூர் வன பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளில், ஏழு மட்டும், மீண்டும் திரும்பி செல்லாமல், ஓசூர் வனப்பக்குதிகுள் தஞ்சம் அடைந்து அருகிலுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி, செட்டிப்பள்ளி என, இடத்தை மாற்றி, யானைகள் தஞ்சம் அடைந்து வருவதால், அவற்றை விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவிக்கின்றனர். தற்போது, போடூர்பள்ளம் வனப்பகுதியில், ஒற்றை யானை, செட்டிப்பள்ளி வனப்பக்குதிகுள் , நான்கு யானை, அத்திமுகம் அருகே, இரு யானை என, மொத்தம், ஏழு யானைகள், மூன்று குழுக்களாக உள்ளன. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று பேரை கொன்ற ஒற்றை யானை, செட்டிப்பள்ளி வனப்பகுதியில் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த யானைகளை அடர்ந்த வனப்பக்குதிகுள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், வனப்பகுதிகளில் மூன்று குழுக்களாக 7 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், வனப்பகுதிக்குள், ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம்’, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் காவலுக்கு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் கிராமமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » ஓசூர் அருகே மூன்று குழுக்களாக 7 யானைகள் ; கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை