Wednesday , 18 July 2018
Home » தமிழ்நாடு » ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு, 4 கட்சிகள் வரவேற்பு! 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு, 4 கட்சிகள் வரவேற்பு! 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

Tamil Nadu election commissionஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டக்கமிஷன் பரிந்துரைக்கு நான்கு கட்சிகள் வரவேற்பும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய சட்டக் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக, திமுக. திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே இம்முறைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளன.தேர்தல் சீர்திருத்தம் குறித்த மத்திய பாஜக அரசின் திட்டம் உள்நோக்கமுடையது என்று ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் இக்கூட்டத்தில் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவில்லை.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் குறித்து சட்டக் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட அறிக்கையில், மோடியின் இத்திட்டம் தேர்தல் செலவுகளை வெகுவாகக் குறைப்பதுடன் 5 ஆண்டுகளுக்குப் பிரதமரும் முதலமைச்சர்களும் எந்தவித இடையூறும் இன்றி ஆட்சியை நடத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com