Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஒட்டன்சத்திரம் அருகே வாகன விபத்து, இருவர் பலி மேலும் பலர் காயம். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மதுரை » ஒட்டன்சத்திரம் அருகே வாகன விபத்து, இருவர் பலி மேலும் பலர் காயம்.

ஒட்டன்சத்திரம் அருகே வாகன விபத்து, இருவர் பலி மேலும் பலர் காயம்.

25 (61)ஒட்டன்சத்திரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து இன்று அதிகாலை திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. 5 மணியளவில் ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு கரிலோடு ஏற்றி வந்த லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. பேருந்தின் பக்கவாட்டு பகுதி சிதைந்து பலத்த சேதமடைந்து, விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயக்குமார் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்டக்டர் ராஜகோபாலன் இறந்தார்.  இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com