Tuesday , 2 March 2021
Home » உலகம் » ஐ.நா., : காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை திசை திருப்ப பாக்., பொய்யான கதைகளை கூறி, விஷத்தை கக்கி வருவதாக ஐ.நா.,வில் இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.

ஐ.நா., : காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை திசை திருப்ப பாக்., பொய்யான கதைகளை கூறி, விஷத்தை கக்கி வருவதாக ஐ.நா.,வில் இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகளின் ஆதரவை பெற பாக்., தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் பாக்., இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் பாக்.,க்கு ஆதரவாக சீனாவும், 15 நாடுகள் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியது. ஆனால் அதுவும் தோல்வியையே சந்தித்தது. காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா-பாக்., ஆகிய இருநாடுகள் இடையேயான பிரச்னை. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது சரியில்லை என அனைத்து நாடுகளும் கூறி சீனாவுக்கு மூக்குடைப்பு அளித்து விட்டன.

இந்நிலையில் ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதியான நாகராஜ் நாயுடு, பொது செயலாளர்களின் செயல்பாடுகள் அமைப்பு தொடர்பான அறிக்கையை ஐ.நா.,வில் நேற்று (ஜன.,22) சமர்பித்தார்.
அதில், ச ர்வதேச அமைப்புக்களை , உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி குழப்ப பாக்., முயற்சித்து வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, சாதாரண உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையே பாக்., எடுத்து வருகிறது. ஒரு நாடு மட்டும் தொடர்ந்து எப்போதும் அவதூறு பேச்சுக்களை பேசி, விஷத்தை கக்கி வருகிறது.

தங்கள் நாட்டு சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை துன்புறுத்தி வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. பாக்., அல்ல பாக்.,ன் பிரதிநிதியாக வேறு எந்த நாடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் தொடர்ந்து சர்வதேச சமூகத்தால் அவைகள் புறந்தள்ளப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com