Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
எஸ்.பி.கே. நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » எஸ்.பி.கே. நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

எஸ்.பி.கே. நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

income tax departவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆனந்தபுரியில் எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் செய்யாத்துரை வீட்டில் செய்யாத்துரை மற்றும் மகன்கள் நாகராஜ், கருப்பசாமி பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் சென்னை வருமானவரித்துறையினர் அதிகாரிகள் 5 வது நாளாக விசாரணை.முடிந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி அலுவலகம் சீல் வைப்பு .அருப்புகோட்டை அனந்தபுரியில் உள்ள எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் செய்யாத்துரை. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட நகராட்சி சாலைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். இவருக்கு கல்குவாரிகள் கிரசர்கள் பஞ்சுநூற்பாளை என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறையினருக்கு வந்த புகார்களை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரைக்கு சொந்தமான 4வீடுகள், 1 அலுவலகம், மற்றும் 5 கார்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையில் 7 வாகனக்ளில் வந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.செய்யாத்துரைக்கு சொந்தமான நான்கு வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 5 வது நாட்களாக தொடர் சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது வந்தது.
சென்னையிலிருந்து சென்னை மண்டல ஆணையாளர் தலைமையில் கொண்ட குழு அருப்புக்கோட்டைக்கு வெந்து விசாரணையை செய்யாத்துரை மற்றும் மகன்களிடம் விசாரணையை துவங்கியது. அதிகாரிகளுடன் செய்யாத்துரை 2 வது மகன் நாகராஜன் காரில் அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து தற்போது வரை விசாரணை சோதனையில் பிடிபட்ட பணம் நகைகள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிவடைந்த பின்னரே ஆவணங்கள் ஏதும். கைப்பற்றப் பட்டத்தா என தெரிய வரும். தொடர்ந்து இரவு முழுவது செய்யாத்துரை மற்றும் நாகராஜனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடைபெற்றுவருகிறது. அதிகாலை முதலே விசாரணை நடத்தி வந்தனர் மாலை 6 3௦ மணி அளவில் விசாரணை முடிந்த நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி முக்கிய அலுவலகத்தில் வைத்து பூட்டி சீல் வைத்தனர் மேலும் செய்யாதுரை இரண்டாவது மகன் நாகராஜை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து சென்றனர் .மற்றும் செய்யாதுரை அவரது மகன்கள் நாகராஜ் கருப்பசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் கைப்பற்றிய பணம் மற்றும் தங்க நகைகள் மேலும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர் .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com