Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
எய்ம்ஸ் மருத்துவமனை சொந்தம் கொண்டாடாமல் விரைவில் பணிகளை முடிக்க வேண்டுகோள் !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » திருப்பூர் » எய்ம்ஸ் மருத்துவமனை சொந்தம் கொண்டாடாமல் விரைவில் பணிகளை முடிக்க வேண்டுகோள் !!

எய்ம்ஸ் மருத்துவமனை சொந்தம் கொண்டாடாமல் விரைவில் பணிகளை முடிக்க வேண்டுகோள் !!

vlcsnap-2018-07-06-10h59m12s129திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரத்தில் மாவட்ட தலைவர் தென்னரசு தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாராபுரம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுகரசுவிற்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர் . இதை தொடந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசு ராகுல் காந்தி அவர்கள் கட்சி பொருப்பேற்றபிறகு மோடி அலை ஓய்ந்து விட்டதாகவும் தற்பொழுது ராகுல் அலை வீசுவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதா எப்படி மருத்துவமனையில் கோமாவில் இருந்தாரோ அதே போல் தமிழக அரசும் தற்போது கோமாவில் உள்ளதாக பேசிய அவர் தமிழகத்தில் தற்போது பி.ஜே.பி.யின் பினாமி ஆட்சியே நடைபெருவதாக கூறினார்
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுகரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வந்திருப்பதை வரவேற்பதாகவும் அதே நேரத்தில் காலம் தாழ்த்தாமல் அதற்கான பணிகளை துவங்கவேண்டும் என்றும் இதில் பி.ஜே்.பி.க்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று சொந்தம் கொண்டாடாமல் விரைவில் பணிகளை முடிக்கவேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசும் துரித நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி மலைவர் ஜான்சிராணி, நகர தலைவர் செந்தில்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com