Friday , 19 October 2018
Home » தமிழ்நாடு » எம்.ஜி.ஆர்.ன். சிகிச்சை ஆவணங்களை அப்போலோ வழங்க வேண்டும்!

எம்.ஜி.ஆர்.ன். சிகிச்சை ஆவணங்களை அப்போலோ வழங்க வேண்டும்!

apollo hosp mainஎம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்க அப்போலோ மருத்துவமனைக்கு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், கடந்த வாரம் அப்போதைய ஆளுனர் வித்யாசகர ராவின் செயலாளர் ஆஜராகி விளக்கமளித்தார். ஜெயலலிதாவை வித்யாசகர ராவ் முதல்முறையாக பார்க்க சென்றபோதே அவர் அபாயகரமான நிலையில் இருந்தது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல வித்யாசகர ராவ் ஏன் பரிந்துரைக்கவில்லை என ஆணையம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான முழு ஆவணங்களை வரும் 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அப்போலோவுக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிகிச்சைப் பெற்ற எம்ஜிஆர், பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கடுத்த ஆண்டு பிப்ரவரியில் குணமாகி நாடு திரும்பினார். ஆனால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வதில் என்ன சிக்கல் என்று ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பி வரும் ஆணையம், அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்ஜிஆருக்கு என்னனென்ன பிரச்சினைகள் இருந்தன, எதனடிப்படையில் அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார் என அப்போலோவிடம் கேட்டுள்ளது. எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல யார் பரிந்துரைத்தது என்றும் கேட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com