Tuesday , 22 May 2018
Home » சினிமா » என்.டி.ஆர் விருது : கமலும்,ரஜினியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து …

என்.டி.ஆர் விருது : கமலும்,ரஜினியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து …

Kamal_Rajini_PTIஇந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிப்பதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக  இந்து தீவிரவாதம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது கருத்தை அவர் திரும்ப பெற வலியுறுத்தினர்.

இருந்த போதும் கமல் அவரது  கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில் இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர். என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஆந்திர அரசு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாக அறிவித்தது. அதில் கமல்ஹாசனுக்கு 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருதும், ரஜினிகாந்துக்கு 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் என்.டி.ஆர் விருது பெற்ற ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு டுவிட்டரிலேயே நன்றி கூறிய ரஜினி, உங்களுக்கும் வாழ்த்துக்கள் கமல்’ என்று கூறியுள்ளார். ரஜினி, கமலின் இந்த டுவிட்டர் பதிவுகள் இருவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com