Friday , 16 November 2018
Home » இந்தியா » எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது! பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது! பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

4எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்களுடன், பிரதமர் மோடி நமோ செயலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது நல்ல ஆட்சி நிர்வாகத்தை தரத் தவறியது, முடிவு எடுக்கும் திறனின்மை, ஊழல் உள்ளிட்ட காரணிகளால் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டதாக கூறினார்.கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் வாயிலாக காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகளைப் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டிருப்பதாக கூறிய அவர், தற்போது எதிர்க்கட்சி என்ற வகையிலும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஒருங்கிணைந்து பிரச்னைகளை பேசியிருந்தால், குறைந்தபட்சம் மக்கள் அவர்களை நம்பியிருப்பார்கள் எனவும், ஆனால் அவர்களோ 4 ஆண்டுகளாக எந்த கவலையுமின்றி இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒன்றிணைந்துள்ளனர் எனவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com