Tuesday , 16 October 2018
Home » உலகம் » ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளுடன் கைது!

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளுடன் கைது!

imageஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், மகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகளும், அவரது மகளுக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாசுடன் லண்டனில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டனர். பாகிஸ்தான் மக்களுக்காக அனைத்து விஷயங்களையும் செய்துவருவதாக கூறிய நவாஸ் ஷெரிப், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க தம்முடன் துணையாக இருங்கள் என்று ஆதரவாளர்களை வலியுறுத்தினார். நவாஸ் நாடு திரும்புவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கட்சி தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். லாகூரில் போராட்டம் நடத்திய நவாஸ் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதற்றம் காரணாக 4 மணிநேர தாமதத்திற்கு பிறகு, நவாஷ் ஷெரிப் விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதைத்தொடர்ந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். அவரது மகள் மரியம் நவாசும் கைது செய்யப்பட்டார். கைதான நவாஸ் ஷெரிப் ராவல்பிண்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் நவாசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com