உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவிகளுக்காக அனிதா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பயிற்சி பெற்ற 128 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துக்கூடாது என்பதில் அதிமுக அரசு தான் கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.