Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து

Bus-lorryஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையிலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 40 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முந்தி செல்ல முயன்ற போது, பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதியதில் இரு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com