ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்தின் தலைநகர் மைடுகுரியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பாகா என்ற இடத்தில் உள்ள மீன் சந்தைக்குள் 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் புகுந்த மர்ம ஆசாமி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரம் கழித்து திங்கள்சந்தை என்ற மற்றொரு சந்தையில் ... Read More »
உலகம்
இலங்கை தொடர்பான அறிக்கை, செப்டம்பரில் நிச்சயமாக வெளியிடப்படும்!
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினால் பிற்போடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை செப்டம்பரில் நிச்சயமாக வெளியிடப்படும் என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ,நாவின் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பிலான அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் தமிழ் மக்கள் கவலையடைய தேவையில்லை என நோர்வே தூதுவர் கிறீற் லோஷன் கூறியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையை பொறுத்து ஐ.நா அறிக்கை வெளியிடப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனவழிப்பு தீர்மானம் ... Read More »
தான்சானியா நாட்டில் பலத்த மழை – வெள்ளத்துக்கு 50 பேர் பலி
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சின்யங்கா பிராந்தியம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. பல கிராமங்கள் மற்ற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தான்சானியா அரசு அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் நிலைமை மோசமாக இருப்பதாக நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. Read More »
வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் சிறிலங்கா ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் ;நுழைய மறுப்பது ஏன் ?
வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் சிறிலங்கா ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் ;நுழைய மறுப்பது ஏன் என்று தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கேள்வி எழுப்பினார். ஐ.நா மனித உரிமைச் சபைத் தொடரில் சிறிலங்கா வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,தமிழின அழிப்பின் தனது இரத்தம் தோய்ந்த கரங்களை மறைத்தவாறு புதிய ஆட்சி புதிய அரசாங்கம் என்ற ஒப்பனையுடன் அனைத்துலகத்தினை ... Read More »
வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்!
வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா உறுதியளித்துள்ளார். இலங்கையின் முன்னாள் குடியரசுதலைவர் மஹிந்த ராஜபக்சவிற்காக தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து யாழ்பாணம், காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவை புதிய குடியரசுதலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது, தான் முன்னதாக யாழ்ப்பாணத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்குக் கேட்டு வந்தேன். ஆனால் இன்று குடியரசுதலைவராக ... Read More »
சுஷ்மா சுவராஜ் 6-ந் தேதி இலங்கை செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதை முன்னிட்டு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வருகிற 6-ந் தேதி கொழும்பு செல்கிறார். கடந்த மாதம் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, தங்கள் நாட்டுக்கு வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, வருகிற 13-ந் தேதி இலங்கை செல்கிறார். அதற்கு முன்னதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற வெள்ளிக்கிழமை (6-ந் தேதி) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். அப்போது அவர் அந்த நாட்டு ... Read More »