தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. .ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முயன்ற சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ... Read More »
உலகம்
ஜப்பானிய பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது
டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு இன்று முடிசூட்டப்பட்டது. ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில், 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டுமழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆராவாரம் எழுப்பினர். பின்னர் பாரம்பரிய உடை அணிந்து ... Read More »
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார் அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்கிறார். இந்தியாவில் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்காவிலும் அதன் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் தீபம் ஏற்றும் விழாவில் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடக்கவுள்ள இந்த விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை ... Read More »
பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து வெடித்ததில் விமானி உள்பட 3 பேர் பலி
பிரேசில் நாட்டில் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள கர்லோஸ் பிரேட்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று காலை தனிநபர் இயக்கி சென்ற சிறிய ரக விமானம், பெலோ ஹாரிசான்டே குடியிருப்பு பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து, தெரு சாலையில் நின்ற 3 கார்கள் மீது மோதி வெடித்தது. இந்த கோர விபத்தில் விமான பயணி, பாதசாரி ஒருவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் என 3 ... Read More »
எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது-அமெரிக்கா
இந்தியாவும்-பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சு நடத்துவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, எல்லை கடந்த பயங்கரவாதத்தை அரங்கேற்றும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதே இந்த பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளது எனக் கூறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற குழு, தெற்காசியாவில் மனித உரிமைகள் குறித்து நாளை விசாரணை நடத்த உள்ள நிலையில், வெளியுறவுத்துறையின் கருத்துகளை, உயரதிகாரி ஆலிஸ் வெல்ஸ் அறிக்கையாக முன்வைத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே, 2006-2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் பின்புலப் பேச்சுவார்த்தைகள் மூலம் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஆலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். எல்லை கடந்த தீவிரவாதத்தை ... Read More »
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியா கூறுவதில் உண்மையில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறுவது உண்மையில்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இதனால் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது, இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து ... Read More »
பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை
செவ்வாய்க்கிழமை (நாளை) மாலைக்குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாதுகாப்பு மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து குர்துக்கள் வெளியேற வேண்டும் என துருக்கி கூறுகிறது. இந்த நிலையில், ... Read More »
சிரியாவில் சொந்த விமான தளத்தை தகர்த்த அமெரிக்க வீரர்கள்
சிரியாவிலிருந்து வீரர்களை விலக்கிக் கொள்ளும் முன், அமெரிக்க படையினர் தங்கள் சொந்த விமான தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சிரியாவின் அல்-ஹசாக் மாகாணத்தில், டல் டாமர் நகர் அருகே, அமெரிக்காவின் படைத் தளம் அமைந்திருந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளுக்கும் துருக்கி ராணுவத்திற்கும் இடையே அப்பகுதியில் சண்டை மூண்டது. குர்து படைகள் அமெரிக்க ஆதரவு பெற்றவை என்றாலும், இந்த மோதலில் தலையிட்டுக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறி, அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டது. அப்படி வெளியேறும் முன், ... Read More »
அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வுகள் இதையே கட்டியம் கூறுகின்றன. இந்த ஆய்வுகளில் அடிக்கடி கிடைக்கும் பழங்கால அரிய பொக்கிஷங்கள், ... Read More »
இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பொதுவான உறவு, ராணுவ உறவு நல்ல நிலையில் உள்ளது. அதே நேரத்தில் வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருதரப்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன. சில வகை உருக்கு பொருட்கள், அலுமினிய பொருட்கள் மீது கடும் வரி விதிப்பில் இருந்து விலக்கு வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்துகிறது. அத்துடன், முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அடிப்படையில், ஜி.எஸ்.பி. என்னும் பொதுவான ... Read More »