Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 4
Friday , 1 July 2022
Home » உலகம்page 4

உலகம்

கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணம் இல்லை

இந்தியாவிலிருந்து கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மதகுருவான குருநானக் தனது வாழ்வின் இறுதிநாட்களை கழித்ததாக நம்பப்படும் தர்பார் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புனித பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், விசா இன்றி அங்கு செல்ல அனுமதி வழங்கிய பாகிஸ்தான், அவர்களிடம் இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதனிடையே கர்தார்பூர் வழித்தடம் வரும் ... Read More »

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு புதிய இடம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன் பின்னர் இந்த இடம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தேர்வு செய்ய சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. Read More »

9 நிமிடங்களில் 6 கிலோ எடை கொண்ட பர்கரை உண்பீர்களா?

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய பர்கர் உணவை 9 நிமிடங்களில் தின்றுவிட முடியுமா என்ற போட்டி நடத்தப்பட்டது பலரை கவர்ந்தது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த பர்கர், 10 ஆயிரம் கலோரிகளுடையது. வறுக்கப்பட்ட வெங்காயம், மாயோனைஸ், பேகன் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அதனுள்ளே திணிக்கப்பட்டு, பெரும் பகுதி இறைச்சியால் நிரப்பப்பட்டிருந்தது. இதனை 9 நிமிடங்களில் தின்று விட்டால் 331 டாலர் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. பர்கர் ஆர்வலர்கள் இதற்கு ஆசைப்பட்டாலும் அடுத்தடுத்து தோல்வியையே தழுவினர். Read More »

பெல்ஜியத்தில் களைகட்டிய ஹாலோவின் திருவிழா

பெல்ஜியம் நாட்டிலுள்ள மிகப்பெரிய மிருகக் காட்சி சாலையான பைரி டைஸாவில் ஹாலோவின் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீய சக்திகளை விரட்டும் திருவிழாவான இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பயமுறுத்தும் நோக்கில் விதவிதமாக முக அலங்காரம் செய்துகொண்டு வந்த அவர்கள் ஆட்டம்பாட்டத்துடன் ஹாலோவினை கொண்டாடினர். அங்குள்ள நீர் யானைக்கு பிரமாண்ட பூசணிக்காயை வழங்கியும் மகிழ்ந்தனர். கானா முதல் மெக்சிகோ நாட்டினர் வரை ஹாலோவின் திருவிழாவை எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்பதை வகைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் அங்கு அரங்கேற்றப்பட்டன. Read More »

ரயிலில் பயணிகள் சமையல் கேஸ்சிலிண்டர் வெடித்து தீ

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீப்பிடித்ததால், 74 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரயிலுக்குள் பயணிகள் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது, திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் பயணிகள் தீயில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்டனர். ஆனால் மூன்று பெட்டிகளில் தீ வேகமாகப் பரவியதால் பலர் வெளியேறவே முடியாதபடி சிக்கி பலியாகிவிட்டனர். தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இறந்தவர்களின் உடல்கள் வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டு ஆம்புலன்சுகளில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் தொலைகாட்சிகளில் ... Read More »

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மின்டனா பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 22 கி.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளது. திடீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதில் ஓட்டல், அலுவலக கட்டிடங்கள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 50 பேர் ... Read More »

காட்டுத் தீயில் இருந்து உயிர் தப்பிய அர்னால்டு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிக்கி உயிர் தப்பியிருக்கிறார். காட்டுத் தீயில் இருந்து உயிர் தப்பிய அர்னால்டு அர்னால்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத்தீயால் பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸ் சொகுசு வீடு ... Read More »

பாகிஸ்தான்: ஓடும் ரெயிலில் தீவிபத்து 46 பேர் பலி

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர். இஸ்லாமாபாத் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது. காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது. இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது. இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து ... Read More »

சீன அதிபருக்கு மாமல்லபுரம்… ரஷ்ய அதிபருக்கு மதுரை! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வரும் விளாடிமீர் புடின்!

சீன அதிபருக்கு மாமல்லபுரம்… ரஷ்ய அதிபருக்கு மதுரை! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வரும் விளாடிமீர் புடின்! புதுடெல்லி: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ... Read More »

நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை

நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது. கடந்த மாதம் 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com