ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் பொதுச் சேவைக்கான பணம் தீர்ந்துவிட்டதாக ரியோ டி ஜெனிரியோவின் இடைகால ஆளுநர் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாக பிரேசில் அரசிடமிருந்து உதவி பெறுவதற்காக அவசர நிலையை பிரகடனம் செய்வதாக இடைகால ஆளுநர் பிரான்சிகோ டோர்னல்லஸ் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பிரேசில் அரசின் உதவியை ரியோ நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More »
உலகம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 50 பேர் பலியான சம்பவம் – ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது
அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரின் மையத்தில் நடந்த இரவு இசை நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓமர் மைதீன் என்ற 29 வயது நபர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் பலியாயினர். இந்த சம்பவம் கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான சம்பவமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ... Read More »
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ஆயுள் தண்டனை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த டொனால்ட் மிடில்டன் என்பவர், கடந்த 1980-ல் இருந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 9 ஆவது முறையாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஓவ்வொரு முறையும் அபராதம் மற்றும் சிறிய அளவிலான சிறை தண்டனையுடன் தப்பித்த இவர் தற்போது, காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் மீது இடித்து விட்ட்தாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இந்தமுறை சிறிய தண்டனையுடன் இவர் தப்பிக்கவில்லை. தொடர்ந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு ... Read More »
தெற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கியது மலேசிய விமானத்தின் பாகங்களா?
தெற்கு ஆஸ்திரேலியப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH 370க்கு சொந்தமானதா? என ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கங்காரு தீவில் சாமுவேல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரால் இந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 7 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள பாகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருவதாகவும், உறுதியாக எதையும் இப்போது தெரிவிக்க இயலாது என்றும் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ... Read More »
பெண்ணின் காதுக்குள் வலைபிண்ணி வாழ்ந்த சிலந்தி
பெண்ணின் காதுக்குள் வலைபிண்ணி வாழ்ந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர்.பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா பிரைஸ். அந்நாட்டு காவல்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காதில் பயங்கரவலிஏற்பட்டது. இதயடுத்து மருத்துவமனைக்குச் சென்ற பிரைஸின் காதுகளைப் பரிசோதித்தபோது, அவரது காதில் சிலந்தி ஒன்று வலைபிண்ணி வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதயடுத்து, அந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர். Read More »
நைஜீரிய நாட்டினரால் கோவா மக்களுக்கு இடையூறு: கோவா முதல் மந்திரி கருத்தால் சர்ச்சை
நைஜீரிய நாட்டு மக்களின் நடத்தை, அணுகுமுறை, வாழ்க்கை முறை ஆகியவை கோவா மக்களை வெறுப்பூட்டும் வகையில் உள்ளதாக கோவா மாநில முதல் மந்திரி லக்ஷ்மிகாந்த் பரசேகர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த கோவா முதல் மந்திரி லக்ஷ்மிகாந்த் பரசேகர் கூறியதாவது:- கோவா மக்கள் நைஜீரிய நாட்டு மக்களை பற்றிதான் பொதுவாக புகார் அளிக்கின்றனர். அனைத்து நாடுகளிடம் இருந்தும் எங்கள் மாநிலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ஆனால், நைஜீரிய நாட்டு மக்களின் அணுகுமுறை, நடத்தை, வாழ்க்கை முறை ... Read More »
ஆளில்லா விமான தாக்குதல் எங்களின் இறையாண்மைக்கு எதிரானது: பாக்.ராணுவ தளபதி அமெரிக்காவுக்கு கண்டிப்பு
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தலீபான் தீவிரவாத இயக்கத்தலைவர் முல்லா அக்தர் மன்சூரை, அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அண்மையில் கொலை செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருவது தங்களது இறையாண்மையை பாதிப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால்.அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி, தாக்குதல்களை தொடர்கிற தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்து விட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் ... Read More »
டெக் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி விண்வெளிக்கு செல்லும் பேஸ்புக் லைவ்
டெக் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பெர்க் உரையாடவுள்ளார். விண்வெளியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த விண்வெளி நிலையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கியுள்ள டிம் கோப்ரா, ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் டிம் பீக் ஆகிய விண்வெளி வீரர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் மார்க் ஜக்கர்பெர்க் வருகிற ஜூன் 1-ல் உரையாட உள்ளதாக ... Read More »
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் ”லேண்ட் ஏர்பஸ்” அறிமுகம்
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் ”லேண்ட் ஏர்பஸ்” இயக்க அந்நாட்டு போக்குவரத்து முடிவு செய்துள்ளது. சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் ”லேண்ட் ஏர்பஸ்” என்ற பேருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம். புதிய அதிநவின தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த பேருந்தின் முழு வடிவம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ”லேண்ட் ஏர்பஸ்” மாடலை சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்கள் இந்த பஸ்சை உருவாக்குகின்றன. இதற்கான ... Read More »
ஆஸ்திரியாவில் மரம் வெட்டும் வினோத விளையாட்டுப் போட்டி
வெளிநாடுகளில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்… ஆஸ்திரியாவில் மரம் வெட்டும் வினோத போட்டி நடைபெற்றது. ஆஸ்திரியாவில் கடல் மட்டத்திலிருந்து 1,700 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் இந்த மரம் வெட்டும் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மரம் வெட்டும் வீரர் Braydon Meyer-ம், மரம் வெட்டுவதில் 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து மரம் வெட்டும் வீரர் Jason Wynyard-ம் பலப்பரீட்சை நடத்தினர். போட்டி தொடங்கியதும் மரம் வெட்டும் உபகரணங்களைக் கொண்டும், கோடாரி-யைக் கொண்டும் விரைவாக மரங்களை வெட்டினர். ... Read More »