Thursday , 21 March 2019
Home » உலகம்page 30

உலகம்

பேஸ்புக் அதிபர் மார்க் ஷுகர்பெர்க்கு பெண் குழந்தை

2EF8387E00000578-3341808-New_addition_Mark_Zuckerberg_and_his_wife_Priscilla_Chan_welcome-a-19_1449010564057

உலக புகழ் பெற்ற பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் செயல் அதிகாரி மார்க் ஷுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான். இவர் கர்ப்பமாக இருந்தார்.இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர்.இத் தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் பேஸ்புக்கில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.பேஸ்புக்கில் இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தங்களது வாழ்நாளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான 99 சதவித கம்பெனிகள் பங்குகளை ... Read More »

உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டும் சவுதிஅரேபியா

build

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டுகிறது.துபாயில் புர்ஜ்கலியா என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக உள்ளது. இது 2700 அடி உயரம் கொண்டது.ஆனால் அதை மிஞ்சும் வகையில் மிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 3280 அடி உயரத்தில் 200 மாடிகள் கட்டப்படுகிறது.இது துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலிபாவைவிட 550 அடி உயரமாகும். அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2 மடங்கு உயரமாகும்.இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் கட்டப்பட்டு வருகிறது. ... Read More »

மாலியில் தீவிரவாதிகள் அட்டூழியம் – பான் கீ மூன் கடும் கண்டனம்

download

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் ஆதிக்கம் செலுத்தி வந்த அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு தற்போது மீண்டும் தீவிரவாதிகளின் கையோங்கி உள்ளது. அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மாலியில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபையின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு ... Read More »

புவி வெப்பமடைதலால் தீவுகள் மூழ்கும் அபாயத்தை, தடுத்து நிறுத்த இந்தியா துணை நிற்கும்!

modi37

புவி வெப்பமடைதலால் தீவுகள் மூழ்கும் அபாயத்தை தடுத்து நிறுத்த இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவழியினரிடையே உரையாற்றினார். புவி வெப்பமடைதலால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, இந்தியாவின் எரிசக்தி தேவை சுற்றுசூழலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நிறைவேற்றிக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், புவிவெப்பமடைவதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து தாங்கள் மூழ்கிவிடுவோமோ என்கிற அச்சத்தில் சில தீவுகள் இருப்பதை கூறிய மோடி அதனைத் தடுத்து நிறுத்த இந்தியா ... Read More »

தீவிரவாதத்தை வேரறுக்க பாதுகாப்பு துறையில், மலேசியாவுடன் இணைந்து இந்தியா செயல்படும்!

modi_650_111214101715

தீவிரவாதத்தை வேரறுக்க பாதுகாப்பு துறையில் மலேசியாவுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 3 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ரசாக்கை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மலேசிய பிரதமர் ரசாக், பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தாக குறிப்பிட்டார். இரு தரப்பு பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக பேசிய பிரதமர் மோடி, இரண்டு மிகப்பெரிய ... Read More »

இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தமிழர்களின் பங்கு முக்கியமானது!

modi-7-800 (1)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மலேசியா வாழ் தமிழர்கள் முக்கியப் பங்காற்றியதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மலேசியா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர், உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தியர்கள் மூலம், உலகம் முழுவதும் இந்தியா வியாபித்துள்ளதாக குறிப்பிட்டார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச மையத்தில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசியா வாழ் இந்தியர்கள் மத்தியில் தமிழில் உரையாற்ற தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.தேசத் தந்தை மகாத்மா காந்தி, தமிழ் ... Read More »

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்குகளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூக்கு

BANGLADESH-HANGING-1-750x347

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அலி ஆசான் முகமது முஜாகித் (வயது 67). மற்றொரு எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி (66). இவர்கள் இருவரும் முந்தைய கலீதா ஜியா மந்திரிசபையில் மந்திரி பதவி வகித்தவர்கள். 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப்போரின்போது, இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள். பாகிஸ்தானுக்கு போரில் தோல்வி நிச்சயம் என்றான நிலையில், வங்காளதேசத்தில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு, படுகொலைக்கு ஆளான சம்பவங்களை ... Read More »

பாகிஸ்தானில் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Part-DEL-Del8384019-1-1-0

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 16 ஆக அதிகரித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை போலான் மாவட்டத்தில் உள்ள அபிகம் பகுதியில் இன்று தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றது.இதில் அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ... Read More »

பழம்பெரும் இந்தி நடிகர் சயீத் ஜெப்ரி மரணம்

Mandatory Credit: Photo by REX Shutterstock (518597y)
SAEED JAFFREY
LONDON RESTAURANT AWARDS, GROSVENOR HOTEL, LONDON, BRITAIN - 04 APR 2005

பழம்பெரும் இந்தி நடிகர் சயீத் ஜெப்ரி லண்டனில் வசித்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. திரையுலகில் அரை நூற்றாண்டை கடந்த அவர், 100-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். நூற்றுக்கணக்கான சர்வதேச திரைப்படங்கள், டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.மரணம் அடைந்த சயீத் ஜெப்ரியின் மூத்த மனைவி மதூர் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவது மனைவி பெயர் ஜெனிபர் சொரேல் ஆகும். சயீத் ஜெப்ரிக்கு ஜியா, மீரா ... Read More »

பிரான்ஸ் முழுவதும் 170 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

French_police_manhunt_Reuters_650_bigstry

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கு உள்ளிட்ட 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 125-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இவர்களில் 3 தீவிரவாதிகள் பாரீஸ் நகரவாசிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், உள்நாட்டில் ரகசியமாக செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உதவியுடன் இந்த தாக்குதலை சிரியா தீவிரவாதிகள் நடத்தியிருப்பதும் பிரான்ஸ் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் 170 இடங்களில் போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக லியான், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com