Thursday , 21 March 2019
Home » உலகம்page 3

உலகம்

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 164 பேர் பலி

earthquake

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியது. 45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.இந்நிலநடுக்கம் சுற்றுலா தலம் ஆக விளங்கும் அருகிலுள்ள பாலி தீவிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தெருக்களில் சிதறி ஓடினர்.இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி இருந்தனர். பின் நேற்று இது 131 ஆக உயர்ந்தது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 164 ... Read More »

இனி வாட்ஸ்அப் செயலியில் அதிக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது

whats up

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எதிர்கொள்ளும் நோக்கில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி ... Read More »

இந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! பொதுமக்கள் 82 பேர் உயிரிழப்பு!!

earthquake

இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது மட்டுமல்லாமல் மரங்கள் முறிந்து விழுந்தன. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக ... Read More »

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஜானு-பி.எப் கட்சி வெற்றி

83bc120f58d3a51434cbf1bde7943417

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. இதனால், முகாபேவின் பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து, தாமாக முன்வந்து சென்ற நவம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலகினார்.முகாபே பதவி விலகலை தொடர்ந்து எமர்சன் நங்காக்வா என்பவர் அதிபர் ஆனார். அந்நாட்டில் மொத்தம் உள்ள இடங்கள் 270 என்றாலும் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல் நடத்தப்படும். மீதி இருக்கும் 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜிம்பாப்வேயில் ... Read More »

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

weapon

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர். Read More »

இஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை

201807280033023940_Palestinian-boyShot-and-killed--thrown-by-knife-at-Israeli_SECVPF

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் இஸ்ரேலியர்களை குறி வைத்து பாலஸ்தீனர்கள் காரை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். அப்படி தாக்குதலில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரோ அல்லது போலீசாரோ சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள ரமல்லா என்கிற இடத்தில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த 17 வயதான பாலஸ்தீன சிறுவன், அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான்.இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்தபடி நாலாபுறமும் ... Read More »

பாகிஸ்தானில் வாக்கு பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது

Who-Will-Win-2018-Elections-In-Pakistan

பாகிஸ்தான் பொது தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் ... Read More »

ஈரானில் நிலநடுக்கம் – சுமார் 400 பேர் காயம்

Earthquake

ஈரான் நாட்டில் மூன்று முறை தாக்கிய நிலநடுக்கம் இதுவரை 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.சில மணி நேரத்துக்கு பின்னர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண கவர்னர் ... Read More »

ருவாண்டாவில் ,விரைவில் இந்தியத் தூதரகம் பிரதமர் மோடி உறுதி!!

modi

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் விரைவில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் ருவாண்டாவுக்கு சென்றார். கிகாலி விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ருவாண்டாஅதிபர் பால் ககாமே பிரதமர் மோடியை கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர், விமானநிலையத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியும், ருவாண்டா அதிபர் பால் ககாமே இருதரப்பு உறவு மேம்பாடு, ருவாண்டாவில் இந்திய முதலீடு ... Read More »

சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷரிப்

sherif

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில், கைது செய்யப்பட்ட இவர்கள் இஸ்லாமா பாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள நவாஷ் ஷரிப், சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் உடல்நிலையை மருத்துவ குழு நேற்று பரிசோதனை செய்தது. பரிசோதனைக்கு பிறகு நவாஷ் ஷரிப் சிறுநீரங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com