Thursday , 21 March 2019
Home » உலகம்page 20

உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ஷெரிப்

images

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ள நிலையில் பலியானவர்களுக்காக பாகிஸ்தானில் இன்று துக்கதினம் கடைபிடித்து வருவதுடன் காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வலியுறுத்தியுள்ளார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த 8-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி புர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு ... Read More »

குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Republican presidential candidate Donald Trump speaks to supporters as he takes the stage for a campaign event in Dallas, Monday, Sept. 14, 2015. (AP Photo/LM Otero)

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ... Read More »

பாகிஸ்தான் மாடல் அழகி கொலையில் மத குரு அப்துல் கவியின் மீது விசாரணை

qandeel-baloch1_759_yt

‘பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன்’ என்று புகழப்பட்டவர், கன்டீல் பலோச் (வயது 26). இப்பெண், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில், அவர் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக பழமைவாதிகள் குற்றம் சாட்டி வந்தனர்.அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத பலோச், பிரபல மத குரு முப்தி அப்துல் கவியுடன் ‘செல்பி’ படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மத குருவின் மடியில் அவர் அமர்ந்திருப்பது போன்ற வீடியோவும் வெளியானது. ... Read More »

துருக்கியில் இராணுவம் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச் சூடு: 17 போலீசார் பலி

636042060341490089-EPA-TURKEY-COUP-ATTEMPT

துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் நேற்று இரவு அறிவித்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.அங்காரா நகரில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அங்காரா நகரில் இராணுவத்திற்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. துருக்கி பாராளுமன்றம் மீது இராணுவத்தினர் ... Read More »

நாட்டின் வளர்ச்சியை 8%க்கு மேல் உயர்த்த நடவடிக்கை: பிரதமர் மோடிஉறுதி

Washington: Prime Minister Narendra Modi addressing a joint meeting of Congress on Capitol Hill in Washington on Wednesday. PTI Photo by Kamal Kishore(PTI6_8_2016_000205A)

இந்தியாவின் வளர்ச்சியை ‌‌8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், முதலீடு, வர்த்தகம் மேற்கொள்ள‌ சிறந்த இடமாக திகழ்வதாகவும‌ பிரதமர் கூறினார். நாட்டின் ... Read More »

கனமழை காரணமாக சீனாவில் 20 பேர் உயிரிழப்பு ;மீட்பு பணிகள் தீவிரம்

SAMSUNG

கனமழை காரணமாக சீனாவில் 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் பிராந்தியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாங்யாங் பிராந்தியத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளத்தின் நடுவில் சிக்கிய ஒரு டாக்சி ஒட்டுநரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மழை ... Read More »

பெலாரஸ் நாட்டில் ஆடை இன்றி பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் ; அந்நாட்டில் நிலவும் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அதிபர் நூதன நடவடிக்கை

Chrysanthemum

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் அந்நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது. மேலும், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். அவர் நாட்டின் ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றிவைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும்’ என சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகாவின் இந்த கருத்தை ‘சீரியஸ்’ ஆக எடுத்துகொண்டு அந்நாட்டில் பலர் ... Read More »

பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலகல்

photo

பொது வாக்கெடுப்பு முடிவை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி வி‌லகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பின் முடிவு வெளியானதை அடுத்து செய்தியாளரை சந்தித்த கேமரன், மக்களின் முடிவு தனது விருப்பத்திற்கு மாறாக அமைந்ததை அடுத்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அக்டோபர் வரையில் தான் பதவியில் நீடித்திருப்பேன் என்றும், புதிய பிரதமர் தலைமையிலான அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான நடவடிக்கைகளைமேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார். சுமார் ஆறு ஆண்டுகள் பிரிட்டனின் பிரதமராக பதவி வகித்ததில் பெருமை கொள்வதாகவும் ... Read More »

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து… வாபஸ் வாங்க மாட்டேன்… அடம்பிடிக்கும் டிரம்ப்

donald-trump4_fb__large

அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க மசூதிகளை கண்காணிக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற டிரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தான் தன் கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அட்லாண்டாவில் நடந்தப் பரப்புரை பேரணியில் உரை நிகழ்த்திய டிரம்ப், ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, பல்ஸ் விடுதியில் இருந்தவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பை ... Read More »

நிதி நெருக்கடியில் ஒலிம்பிக் நடத்தும் ரியோ.

oli

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் பொதுச் சேவைக்கான பணம் தீர்ந்துவிட்டதாக ரியோ டி ஜெனிரியோவி‌ன் இடைகால ஆளுநர் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாக பிரேசில் அரசிடமிருந்து உதவி பெறுவதற்காக அவசர நிலையை பிரகடனம் செய்வதாக இடைகால ஆளுநர் பிரான்சிகோ டோர்னல்லஸ் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பிரேசில் அரசின் உதவியை ரியோ நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com