Thursday , 21 March 2019
Home » உலகம்page 2

உலகம்

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு பலியானோர்ஆயிரத்து இருநூறாக உயர்வு!

INDONES

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. பலு மற்றும் டோங்காலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலு கடலோர பகுதியில் இடிபாடுகளில் 821 சடலங்களும், டோங்கலாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்தது. இதில் உயிரிழந்தவர்களில் 61 பேர் ... Read More »

அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

3

கடந்த 2015-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.  அமெரிக்காவில் இந்த மாதம் நடைபெற உள்ள ஐநா.பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், பாகிஸ்தான் சார்பில் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்க உள்ளனர். ... Read More »

காஷ்மீர் பிரச்சினையை இழுத்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி

1

பாகிஸ்தான் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற ஆரிப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவுடன் அமைதியான உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. இது இருதரப்பும் விரும்பும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின் படி அமைதியான தீர்வுகாண வேண்டும். ஒருவரை மற்றொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினைகளைத் தீர்த்து, ... Read More »

மீண்டும் சந்திக்க விருப்பம் கிம் ஜாங் அன்னுக்கு டொனால்டு டிரம்ப் கடிதம்

trump

வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற ... Read More »

ஈரானில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரம்-அதிபர் மீது நீதி விசாரணை

eeran

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு ... Read More »

என்னை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரமே சீர்குலையும் – டிரம்ப்

Trump

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை கோர்ட்டில் ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் ... Read More »

19 வயதான ஆண்-பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி!!

Army

வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய – பெர்பர் வம்சாவளியினராவார்கள்.அந்நாட்டில் ... Read More »

அடுத்தடுத்து இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 5 பேர் உயிரிழப்பு

earthquake1

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பீதியில் இருந்து மீள்வதற்குள், இந்தோனேசியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ... Read More »

பாகிஸ்தானின் 22 பிரதமராக பதவி பதவியேற்கிறார் இம்ரான்கான்

imran khan

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கிறார். இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான் கான் கட்சியுக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.இதில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலந்துக்கொள்ளவில்லை. ... Read More »

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: 39 பேர் பலி

Fire accident

சிரியா நாட்டில் ராணுவப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள இத்லிப் மாகாணத்தின் ஷர்மதா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர வெடிப்பொருட்கள் உள்ளடங்கிய ஆயுதக்கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் இரண்டு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்நிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷர்மதாவிலுள்ள குடியிருப்பு பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் ஆயுதக்கிடங்குகளாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் குடியிருப்பு பகுதியிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பலியானதாக ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com