Thursday , 21 March 2019
Home » உலகம்page 10

உலகம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை பயணம்

narendramodipti-m

ஐ.நா.சபை சார்பில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். கொழும்பு நகரில் நடைபெறும் சர்வதேச புத்த விசாக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு செல்ல உள்ளார்.இந்த நிகழ்வில் 100 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தலைவர்களும் அமைச்சர்களும் கலந்துக்கொள்கின்றனர். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பிரதமர் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரசித்தி பெற்ற கண்டி நகருக்கு செல்வார் என்றும் அங்குள்ள மலையக தமிழ் மக்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள புத்த தேவாலயங்களையும் ... Read More »

பிரதமர் மோடி – ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி சந்திப்பு

pm-narendra-modi-meets-russian-deputy-pm-dmitry-o-rogozin

ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் ஒரு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டிமிட்ரி இன்று சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு ரஷ்ய துணை பிரதமர் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுஷ்மா, “ரஷ்யா உடனான உறவு இந்திய வெளியுறவுக் கொள்கையின் வலிமையான தூண்களில் ஒன்று. இந்திய-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூன் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல உள்ளார்.உள்நாட்டு அணுசக்தி, ... Read More »

அதிபராகும் ஆசை இல்லை…மிஷேல் ஒபாமா …

michel-obama-nit

எதிர்காலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் கூறியுள்ளார். ஒபாமாவின் பதவிக் காலம் முடிந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, மிஷேல் ஒபாமா முதல்முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். ஆர்லாண்டோவில் ((Orlando)) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு வாழ்க்கை அனுபவம் எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொண்டார். கல்வி, பொருளாதார சமத்துவம் உள்ளிட்ட துறைகளில் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்காக தொடர்ந்து பணியாற்றப் போவதாகக் குறிப்பிட்டார். அதேசமயம் ... Read More »

மீனவர்கள் மீது எந்த சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது – பிரதமர் மோடி வலியுறுத்தல்

IndiaTv4221cc_PM-MODI-SRILANKA-EDITED

அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டில்லி வந்துள்ளார். இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்த அவர், பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். இருவரும் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்இந்த சந்திப்பின் போது, எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது எந்த சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது. தமிழக மீனவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என இலங்கை ... Read More »

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே!

54659556

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் இன்று அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கைப் பிரதமர் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அமைச்சர்கள் சமரவிக்ரமா, அனுரா பிரியதர்சனா உள்ளிட்டோரும் அவருடன் டெல்லிக்கு வந்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கே இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இந்தியா- இலங்கை இடையே தடையற்ற வர்த்தகம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளிடையே உறவை ... Read More »

என் தேசம் என் மக்கள் …பெயரைமாற்றினா உனக்கென்னா ? இந்தியாவை சீண்டுகிறது சீனா !!

china-flag__large

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 6 ஊர்களின் பெயர்களை சீனா மாற்றியமைத்துள்ளது. தங்கள் நாட்டு பாரம்பரியப்படி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சீன உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும் சீனா விளக்கமளித்துள்ளது. தங்களுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சீனா பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. தலாய்லாமாவின் அருணாச்சல் பயணம் சீனாவுக்கு ஆத்திரமூட்டியிருந்த நிலையில் இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More »

‘ஆஸி’ செல்வது இனி ‘ஈஸி’ அல்ல ; விசா கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியதால் இந்தியர்களுக்கு கெடுபிடி …

Indian-Passport

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்தி வந்த 457 விசா திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்-1பி விசா மீது தடை விதிக்க நடவடிக்கை எடுத்தது போன்று, தற்போது ஆஸ்திரேலியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் 457 விசாவை பயன்படுத்தி பணியாற்றி வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 95, ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தகவல்வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில்வேலைஇல்லாதிண்டாட்டத்தைசரிசெய்யவேகட்டுப்பாடுகள்கொண்டுவந்துள்ளதாகஆஸ்திரேலிய அரசு விளக்கம் ... Read More »

கள்ளநரிக்கு உதவிய குள்ளநரிக்கூட்டம்…ராஜபக்சேவின் பேச்சு மூலம் இந்தியா ஆனது நிர்மூலம்

2360800-3x2-940x627

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு இந்தியா தன்னிச்சையாக உதவிகளை வழங்கியதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ’இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது, இந்தியாவிற்கு எதிரான யுத்தமாகவே காணப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான யுத்த முடிவிற்கு, அனைத்துவித உதவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கின’ என அவர் தெரிவித்தார். விடுதலைபுலிகளுக்கும், இலங்கை அரசுக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த 2009ம் ஆம் ஆண்டு ... Read More »

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ராட்சத குண்டுவீச்சு …

201704160026045679_US-bombing-in-AfghanistanThe-death-toll-has-risen-to-94_SECVPF

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள், ஆயுதக்கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து கடந்த 13–ந் தேதி அமெரிக்கா ‘வெடிகுண்டுகளின் தாய்’ என்று அழைக்கப்படுகிற 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத குண்டை போட்டது. ஜி.பி.யு. 43/பி என்று அழைக்கப்படுகிற அந்த குண்டு, அங்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. மலைப்பகுதிகளில் இருந்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள், ஆயுதக்கிடங்குகள் நாசமாயின. 36 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் ... Read More »

பூமியை நெருங்கும் விண்கல்….ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் !!

131362878951377632fuDescImage

வரும் 19ம் தேதியன்று மிகப்பெரிய விண்கல் ஒன்று, பூமிக்கு மிக அருகே கடந்துசெல்ல உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது. அவ்வபோது விண்கல் பூமி மீதோ அல்லது வேறு கிரகங்கள் மீதோ மோதுவதும் அல்லது அவற்றின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைவதும் வழக்கமாக உள்ளது.இதன்படி, 650 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத விண்கல் ஒன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகில் வர உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.இது பூமியை கடந்து செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ஒருவேளை பூமி மீது மோதுமா என தீவிரமாக ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com