Tuesday , 30 November 2021
Home » உலகம்

உலகம்

ஐ.நா., : காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை திசை திருப்ப பாக்., பொய்யான கதைகளை கூறி, விஷத்தை கக்கி வருவதாக ஐ.நா.,வில் இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகளின் ஆதரவை பெற பாக்., தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் பாக்., இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் பாக்.,க்கு ஆதரவாக சீனாவும், 15 நாடுகள் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியது. ஆனால் அதுவும் தோல்வியையே சந்தித்தது. காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா-பாக்., ஆகிய இருநாடுகள் இடையேயான பிரச்னை. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது சரியில்லை என அனைத்து நாடுகளும் கூறி சீனாவுக்கு மூக்குடைப்பு அளித்து விட்டன. இந்நிலையில் ஐ.நாவிற்கான ... Read More »

சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17 பேர் உயிரிழப்பு…

சீனாவில் பரவி வரும் கரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. சீனாவின் உஹான் (Wuhan ) பகுதியில் கரோனா எனும் புதிய வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. வூஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளிலும் கரோனா வைரஸால் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ... Read More »

அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் அதிகரிப்பு ; கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டதை ... Read More »

அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்ற சிலி விமானம் மாயம்

அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்றபோது காணாமல் போன சிலி நாட்டு சரக்கு விமானத்தை தேடும் பணி நடைபெறுகிறது. பன்டா ஏரேனாஸில் இருந்து மாலை 4. 55 மணிக்கு ஹெர்குலிஸ் சி 130 விமானம், அண்டார்டிகாவில் உள்ள சிலி தளத்துக்கு தளவாட பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில் 17 சிப்பந்திகள் உள்ளிட்ட 38 பேர் பயணித்தனர். இந்நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் விமானத்துடன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அதிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் சிலி ... Read More »

பல்கலை. ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது

அமெரிக்காவில் பல்கலைக்கழக ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 வேதியியல் துறை பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்காடெல்ஃபியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றும் டெர்ரி டேவிட் பேட்மேன், பிராட்லி ஆலன் ரோலண்ட் ஆகிய இருவரும் ஆய்வகத்தில் மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணையில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்தது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்தால் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள் ... Read More »

இலங்கையில் நாளை அதிபர் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், இலங்கை பொதுஜன பெரமுனா வேட்பாளரான முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, புதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதேசா ஆகியோர் முக்கிமானவர்கள். தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு யாழ் மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. Read More »

பின்லேடனை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையை விளக்கும் வகையில் நியூயார்க்கில் கண்காட்சி

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை பிடிக்க, அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான கண்காட்சி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக மைய கட்டிடத்தில், விமானத்தை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 3,000 பேர் பலியாகினர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, 10 ஆண்டுகால தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ... Read More »

துருக்கி அதிபருடனான சந்திப்பை பல மணி நேரம் நீட்டித்து சமாளித்த டிரம்ப்

துருக்கி அதிபருடனான சந்திப்பை நீண்ட நேரம் கொண்டதாக மாற்றி, தன்னை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விசாரணையில் பங்கேற்பதை, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் லாவகமாக சமாளித்து, தவிர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனுடன், சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு, பல மணி நேரங்கள் நீண்டு கொண்டே இருந்தது. முதலில் ராணுவ மரியாதை, அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் சந்திப்பு, தனித்து இருவரும் பேச்சுவார்த்தை, ... Read More »

2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார். அப்போது 2020ம் ஆண்டு ஜனவரி 26ல் நடைபெறவுள்ள இந்தியக் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, போல்சனேரோவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »

ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி – 150 வனவிலங்குகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 150 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. மிகவும் குறைவான மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம், மரங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தொடரும் இப்போக்கினால் வனஉயிரினங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நீர் மற்றும் உணவின்றி 55 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கடந்த சில வாரங்களில் 150 யானைகள் மற்றும் காட்டெருமைகள், காட்டு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com