Wednesday , 28 June 2017
Home » உலகம்

உலகம்

மனித உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி ; தென் ஆப்ரிக்காவில் காட்சியளிக்கும் வினோதம் …

22468

தென் ஆப்ரிக்காவில், ஆடு ஒன்று பாதி மனித உருவத்துடனும், பாதி மிருக உருவத்துடனும் குட்டி போட்டிருப்பது காண்போரை அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது லேடி ஃப்ரெர். கிட்டத்தட்ட 4000-க்கும் அதிகமானோர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் விவசாயிகள். இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள ஆடு ஒன்று குட்டி போட்டது. ஆனால் அது வழக்கமான ஆட்டுக்குட்டி போன்று இல்லை. பாதி மிருகம் போன்றும் பாதி மனிதன் போன்றும் உடல்வாகை கொண்டிருந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். மேலும் ... Read More »

சசிகுமாருடன் இணைகிறார் ‘மைனா’ விதார்த் ; கை கொடுக்குமா ? அடுத்த படம்

Actor Vidharth in Venmegam Tamil Movie Stills

கொடிவீரன் படத்தில் சசிகுமாருடன் இணைகிறார் ‘மைனா’ விதார்த். விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வரும் கொடி வீரன் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விதார்த். சசிகுமாருக்கு தம்பியாக நடிக்கும் அவருக்கு ஜோடியாக சனுஷா நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள விதார்த், வரும் 22ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.  விதார் தற்போது, குரங்கு பொம்மை, வண்டி, சீம தண்ணி ... Read More »

தண்ணீர் வறட்சியால் பலியான சஹாராபாலைவன மக்கள் ; இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதாக தகவல்

sahara-desert

சகாரா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீரின்றி 44 பலி. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் இருந்து புலம் பெயர்ந்து 50 பேர் லிபியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இவர்களில் 17 பெண்கள், இரண்டு சிறுவர்கள், மூன்று குழந்தைகளும் அடங்குவர். சகாரா பாலைவனத்தின் வழியாக வாகனம் ஒன்றில் இவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாலைவனத்தில் சிக்கித் தவித்தனர். அவர்கள் கொண்டுச் சென்ற தண்ணீர் காலியானதால் பெரும் தவிப்புக்குள்ளாயினர். பின்னர் தண்ணீரின்றி ஒவ்வொருவராக உயிரிழந்துள்ளனர். சிலர் வேகவேகமாக நடந்து தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றை அடைந்தனர். ... Read More »

கரையை கடந்தது மோரா புயல் …

nilofar.a2014301.0650.2km_0

வங்கக் கடலில் உருவான மோரா புயல் இன்று காலை வங்கதேசத்தில் கரையைக் கடந்தது. கொல்கத்தாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த மோரா புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் அருகே இன்று காலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிட்டகாங் நகரில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மோரா புயல் கரையைக் கடந்ததால் இந்தியாவில் மிசோராம், நாகாலாந்து, மணிப்பூர், ... Read More »

ரஷ்யாவில் வீசிய சூறாவளி ; 11 பேர் உயிரிழப்பு …

moscow-Storm-

ரஷ்யாவில் வீசிய சூறாவளியால் , ஏற்பட்ட பாதிப்புகளில் 11 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது. இதில், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அடித்துச் செல்லப்பட்டன. சூறவாளியுடன் மழையும் பெய்ததால் மாஸ்கோ முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் விழுந்ததில் ஏராளமான கார்கள் சேதமடைந்தன. இவற்றில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தில் உள்ள ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், சீரமைப்பு பணிகளை ... Read More »

பிலிப்பைன்சில் தீவிரவாதிகளுக்கெதிராக தாக்குதல்…

Philippines-Army

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி பகுதியை முற்றுகையிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஆறு நாட்களாக சண்டை நடந்து வருகிறது. இதனிடையே மாராவியின் புறநகர் பகுதியில் எட்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் பெரும்பாலும் தலையில் சுடப்பட்டும், பின்புறமாக கைகள் கட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரவைன் என்ற இடத்திலும் சிலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இதுவரை இருதரப்பினரிடையே ... Read More »

போப் பிரான்சிஸை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ttttt

இத்தாலியில் உள்ள வாடிகனில் போப் பிரான்சிஸை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேசினார். குடியேற்றக் கொள்கை, பருவ நிலை மாற்றம், கருக்கலைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், போப் பிரான்சிசும் ட்விட்டரில் எதிர் எதிர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் வாட்டிகனுக்கு சென்ற டிரம்ப் போப் பிரான்சிஸை முதன் முறையாக நேரில் சந்தித்தார். வழக்கமான விருந்தினர் மாளிகையில் இல்லாமல், போப் அதிகம் பயன்படுத்தாத அபாஸ்டாலிக் அரண்மனையில் உள்ள தனி நூலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மிகச்சிறந்த ... Read More »

ஆம்ஸ்ட்ராங் தடயங்களை எடுத்து வந்த பை ஏலத்திற்கு வருகிறது

700x350-moon__large

விண்வெளி வீரரான ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் உள்ளிட்ட சில தடயங்களை எடுத்து வந்த பை வரும் ஜுலை 20ம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதன் முறையாக சந்திரனில் இறங்கினார். அவருடன் மற்றொரு விண்வெளி வீரரான புஜ் அல்ட்ரினும் இருந்தார். இதையடுத்து சந்திரனிலிருந்து ஒரு சில தடயங்கள், மண் போன்றவற்றை ஒரு பையில் சேகரித்து வந்தனர். இது மனித குலத்தின் பெரிய சாதனையில் அரிதான ஒன்றாகும். ... Read More »

விமான தளத்தில் தீ விபத்து ..141 பேர் தீக்கிறை…

2011-08-25 15.21.07

லிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள அரசு ராணுவ விமானத் தளத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 141 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலில் எதிரொலியாக லிபிய பாதுகாப்பு அமைச்சர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறிப்பு லிபியா அரசு தரப்பில், “லிபியாவில் வியாழக்கிழமை பிராக் அல் ஷாட்டி நகரில் ராணுவ விமானத் தளத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 141 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை ... Read More »

வைரசே விலகு… விலகு !! கம்பியூட்டர்களுக்கு புனித நீர் அபிஷேகம்

virus__large

ரஷ்ய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க, ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை தெளித்து வழிபாடுகளை நடத்தியுள்ளனர். தற்போது இணைய உலகத்தை ரான்சம்வேர் என்ற வைரஸ் தாக்கி வருகிறது. ரான்சம்வேர் என்பது வைரஸை பயன்படுத்தி பணம் பறிக்கும் முறை. அதாவது இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்ற செய்தியே இன்று பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அரசு, ரான்சம்வேர் வைரஸ் இருந்து டேட்டாக்களை காப்பாற்ற ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com