Sunday , 22 July 2018
Home » உலகம் » உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் ஆறு அணிகள் தகுதி!!

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் ஆறு அணிகள் தகுதி!!

fifa world cup21வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது. லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ‘ஈ’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘எஃப்’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘ஜி’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன்களான பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக்கோப்பையில் ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன், பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ள இத்தாலி அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறவில்லை.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com