Sunday , 16 December 2018
Home » இந்தியா » உத்தர பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

உத்தர பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

1உத்தர பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து டெல்லி நோக்கி நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி அவரது அலுவலக டுவிட்டர் பக்கத்தில், ரேபரேலியில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வருத்தம் அடைகிறேன் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com