Thursday , 16 August 2018
Home » சிறப்புச் செய்திகள் » உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு

உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  அதிமுக சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் அக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கலந்து கொண்டுள்ளனர்.

கோவையிலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போரட்டம் நடைபெற்று வருகின்றது.இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அவர்,இவ்விதம் தெரிவித்தார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com