Monday , 20 November 2017
Home » உலகம் » ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் !!

ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் !!

earthquakejpgஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட  பயங்கர நிலநடுக்கத்தால் 130-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான்- ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஈராக் நாடு முழுவதுமே அதிர்வை சந்தித்தது. இந்த நிலநடுக்கத்தால் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

இந்நிலநடுக்கமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com