Tuesday , 22 May 2018
Home » உலகம் » இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் கதி என்ன ?

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் கதி என்ன ?

31MA_FISHERMEN_RMD_1818818fஇலங்கை சிறைகளில் உள்ள 113 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் அனைவரும் அங்குள்ள  சிறைகளில் அடைத்துவைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும், இந்த மாதம் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரவுள்ளதையொட்டி, தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com