Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16-தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16-தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!

palanisamy-24-1503517768இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இலங்கை சிறையில் ஏற்கனவே, எட்டு தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பிடிப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ரூபாய் 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி இந்த தண்டனை பிறபிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கையில் உள்ள 16 மீனவர்களை மீட்க வேண்டும் என்றும், இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புது சட்டம் பாதிப்பாக உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார

Facebook Auto Publish Powered By : XYZScripts.com