Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும்

இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும்

1இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் உசேன் திருச்சியில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இணை அமைச்சர் சையது அலி ஜாஹிர் உசேன் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வருகைபுரிந்தார். முன்னதாக இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியின் தேசியதலைவர் காதர்மொய்தீனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை இணை அமைச்சர், இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழையும், தமிழர்களுக்கு சிங்களத்தையும் பயிற்றுவித்து இணக்கமுடன் வாழ வழிவகை செய்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கட்சி சார்பிலும், தமிழ்பேசும் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொண்டார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com