Thursday , 21 March 2019
Home » உலகம் » இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்

3இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இலங்கையில் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார். இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக மீண்டும் பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அதிபர் சிறிசேனா மற்றும் ரணில் இருவரும் தொலைப்பேசி வாயிலாக உரையாடியதாகவும், அதன்மூலம் இந்த பதவியேற்பு நிகழ்வு முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் நியமனம் குறித்தும் இருவரும் பேசியதாகவும் கூறப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே முன்னர் வகித்து வந்த சட்டம் ஒழுங்குத் துறையை அவருக்கு வழங்கப்பட மாட்டாது என்றும், அத்துறைகளை சிறிசேனாவே கவனிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com