இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், இலங்கை பொதுஜன பெரமுனா வேட்பாளரான முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, புதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதேசா ஆகியோர் முக்கிமானவர்கள். தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு யாழ் மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.