Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இம்ரான் கான் பதவிவிலகக் கோரி ஆசாதி பேரணி-போராட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » உலகம் » இம்ரான் கான் பதவிவிலகக் கோரி ஆசாதி பேரணி-போராட்டம்

இம்ரான் கான் பதவிவிலகக் கோரி ஆசாதி பேரணி-போராட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டே நாட்களில் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கராச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோருடன் புறப்பட்ட விடுதலைப் பேரணி நேற்று இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது. இம்ரான் கானின் போலியான அரசு விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கள்ள ஓட்டுகள் மூலம் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், வாய்ப்பளித்தால் ஆறு வாரங்களுக்குள் அதனை சீரமைக்க தங்களால் முடியும் என்று சவால் விடுத்துள்ளனர்.

இதனிடையே, கில்ஜித்-பால்திஸ்தானில் (Gilgit-Baltistan) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், மதத்தின் பெயரால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய காலங்கள் போய் விட்டன என்றும், இது புதிய பாகிஸ்தான் என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com