Thursday , 21 March 2019
Home » இந்தியா » இன்று மாலை ஆந்திரா கரையை,கடக்கிறது பெய்ட்டி புயல்!

இன்று மாலை ஆந்திரா கரையை,கடக்கிறது பெய்ட்டி புயல்!

2ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயல் காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் எனவும், வட தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது. புயல் கரையைக் கடப்பதையொட்டி, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com