Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 29 September 2022
Home » இந்தியா » இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.

இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. எனினும் பிறகு ஓரளவு சென்செக்ஸ் சரிவில் இருந்து மீண்டது.

தேசிய பங்கு சந்தையின் நிப்டி 39 புள்ளி 30 குறைந்து 12 ஆயிரத்து 13 என்ற அளவில் வர்த்தகமானது.நேற்று மாலை சென்செக்ஸ் 40,581 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

கோடக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, எல் அன்டு டி ஆகியவற்றின் பங்குகள் ஒன்று முதல் ஒன்றரை சதவிகிதம் சரிவை சந்தித்தன. டி.சி.எஸ், டெக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., ரிலையன்ஸ் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 புள்ளி 03 காசுகளாகவும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 71 புள்ளி 75 டாலராகவும் உயர்ந்துள்ளது.

ஆசிய பங்கு சந்தைகளைப் பொறுத்தவரை ஜப்பானில் 2 சதவிகிதமும், ஹாங்காங்கில் ஒரு சதவிகித வீழ்ச்சியும் பதிவாகி உள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் அதிகரித்து கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் சர்வதேச வர்த்தக சந்தைகள் பதற்றத்தில் உள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com