Thursday , 21 June 2018
Home » தமிழ்நாடு » இன்றுடன் முடிகிறது மாத மீன்பிடித் தடைக்காலம்!

இன்றுடன் முடிகிறது மாத மீன்பிடித் தடைக்காலம்!

dsc04090இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், பல்லாயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இருந்து வந்தது. பின்னர் இது 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருவதால், சென்னை காசிமேட்டில் இருந்து ஆயிரத்து 200 விசைப்படகுகளின் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படகுகளுக்கு மராமத்து பணிகள் செய்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடலுக்குச் செல்ல தேவைப்படும் டீசல், ஐஸ்கட்டிகள் , உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர். மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களையும் அவர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல்மீனவர்கள் கடலுக்குச் செல்வதால் மீன்விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com