Monday , 17 December 2018
Home » உலகம் » இந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! பொதுமக்கள் 82 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! பொதுமக்கள் 82 பேர் உயிரிழப்பு!!

earthquakeஇந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது மட்டுமல்லாமல் மரங்கள் முறிந்து விழுந்தன. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும் கடல் அலைகள் எதிர்பார்த்த அளவிற்கு எழாததால் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com